எங்களைப்பற்றி…

கலைஞர் இணைய வானொலி

இது தமிழர்களின் குரல்”

உலக தமிழ் மக்களின் மனதில் எங்கும் நீங்காத இடம் பிடித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆவர்.இவர்  திராவிட அரசியலின் முத்தாக, முதுகெலும்பாக 50 ஆண்டுகள் நிலைத்து நின்றார். அரை நூற்றாண்டின் தலைப்புச்செய்தியாக திகழ்த்தவர்.தொடர்ந்து 12 முறை எம்.எல்.ஏ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய அரசியல்வாதிகள் யாரும் செய்திடாத சாதனைகளுக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக பதவி வகித்து சாதனைப்படைத்த சாதனை நாயகர். இவர் எழுத்தாளர், நாடக் கலைஞர், கவிஞர், மற்றும் பத்திரிக்கையாளர் என பன்முகம் கொண்ட பல்கலை வேந்தர். தன் வாழ்நாளில் 21 நாடகங்களிலும் ,69 படங்களில் பணியாற்றிய படைப்பாளர் ஆவர்.மேலும்

கலைஞர் கருணாநிதி அவர்கள், இலக்கியப் பணியில் இதுவரை சுமார் 150ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அதில் சமூகம் சார்ந்த பத்து நாவல்களும், 6 சரித்திர நாவல்களும் எழுதி சாதனைபடைத்த இலக்கிய சிற்பி” என்று சொல்வது மிகையாகாது. உடன்பிறப்பே” என்று முரசொலியில் சுமார் 7000 கடிதங்கள் எழுதி சாதனைப்படத்த ஜாம்பவான்.

1960 இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழகத்தை, தனது ஆட்சியில்  2011 ல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக திகழவைத்து சிறந்த ஆட்சி புரிந்த  ஆட்சியாளர்  ஆவர். இதுமட்டும் இல்லாமல் இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியை தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை வழங்கும் முகியமானவராக, பல்வேறுகட்டத்தில் கலைஞர் அவர்கள் முக்கிய பங்குவகித்தார். இப்படி இவரின்  சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்… இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின், புகழை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் 24 மணி நேரமும் உலகம் முழுவது ஒலிபரப்பாகும் கலைஞர் இணைய வானொலி இது தமிழர்களின் குரல்” . கலைஞர் இணைய வானொலியில் கலைஞர் புகழ் பாடும் பாடல்கள்,கலைஞர் திரைக்கதை ,வசனம்,  அவர் எழுதிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்,கலைஞர் வசனத்தில் உருவான காட்சிகள், ஒலி வடிவிலான  வசனங்கள், கலைஞர் ஆற்றிய உரைகள்,கலைஞரை பற்றி பிரபலங்கள் ஆற்றிய உரைகள் , இவ்வாறு  அறிய ஒலி களஞ்சியமாக கலைஞர் இணைய வானொலி ஒலிபரப்பாகும்.

                                                                          –@கலைஞர் இணைய வானொலி

Kalaignar FM

(Online Radio)

“This is the voice of Tamils”

Dr. Kalaignar Karunanidhi is one of the most beloved Tamil artists in the world. He has been the backbone of Dravidian politics for 50 years. He has been the headline news for half a century. He has been elected MLA 12 times in a row. None of the Indian politicians owns the record. He is a five-time Chief Minister of Tamil Nadu. He is a versatile university writer, playwright, poet, and journalist. He is the creator of 21 plays and 69 films in his lifetime

Kalaignar Karunanidhi has written more than 150 books on literature so far. It is no exaggeration to say that he was a “literary sculptor” who wrote ten novels and 6 historical novels on community. He is the record holder who wrote about 7000 letters in Murasoli saying “Udanpirappe”.

He ruled Tamil Nadu, the poorest state in India in 1960, as one of the richest states in the country in 2011. Not only this, the artist also played a key role in advising on the selection of the Prime Minister and President of India. The list of his achievements can go on and on like this. Kalaignar Internet Radio  Kalaignar Praise Songs, Kalaignar Screenplay, Verse, Songs from His Movies, Kalaignar Verse Scenes, Audio Verses, Kalaignar Texts, Celebrity Texts About the Kalaignar, Kalaignar Online Radio.

                                                                                                            -@kalaignarfm

 www.kalaignarfm.com